ஆசிரியர் தினக் கவிதை
கடவுளைக் காட்டியவர்
காகிதத்தை செல்வமாக்கியவர்
கிள்ளை மொழியையும் கவிதையாக்கியவர்
கீற்றுக்கும் கீர்த்தி கொடுத்தவர்
குருவாய் வந்து அனைவருக்கும்
கூரிய அறிவைப் போதித்தவர்
கெஞ்சியும் கொஞ்சியும்
கேள்விகளால் வேள்விசெய்து-எங்கள்
கைபிடித்து நன்நடை பழக்கியவர்.
கொள்கையுடன் வாழப்பழகிக்கொடுத்து
கோவில் கோபுரமாய் நாங்கள் உயர்ந்து நிற்க - எங்கள்
கௌரவமே தங்கள் வாழ்வென்று
வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கும் அனைத்து
ஆசிரியப் பெருமக்களின் திருத்தாள்
தொழுகிறோம்.
--பெண்ணின் பேனா. பெ.ஆனந்தி.
0 பின்னூட்டங்கள்
முதல் பின்னூட்டத்தை நீங்கள் இடுங்கள்!
உங்கள் கருத்தைப் பகிரவும்