பெண்ணின் பேனா - சுதந்திரதினக் கவிதை
அந்நியன் கட்டிய சங்கிலி
அறுந்த நாள் மட்டும்
சுதந்திரமன்று ....
அடுப்பங்கறைச் சுவருக்குள்
அடைக்கப்பட்ட கனவுகளும்,
அனுமதிக்காகக் காத்திருக்கும் ஆசைகளும்
விடுதலை பெறும் நாளே
உண்மையான சுதந்திரம்!
பாதுகாப்பு என்ற பெயரில்
பறிக்கப்படும் சிறகுகளுக்குத் தேவை சுதந்திரம்.
பயமின்றி பறக்கத் துடிக்கும்
பெண் குழந்தையின் கனவுகளுக்குத் தேவை சுதந்திரம்.
வாக்குரிமை மட்டும் தந்து
அதிகாரங்களை மறுக்கும் அரசியலில் வேண்டும் சுதந்திரம்.
வரலாற்றின் பக்கங்களில்
தன் பெயரையும் வரையும் பேனாக்களுக்கு வேண்டும் சுதந்திரம்.
கல்விக்கான கதவுகள் திறந்து,
கனவுகளுக்குச் சிறகுகள் முளைத்து,
தன் பாதையைத் தானே தேர்ந்தெடுத்து
தலைநிமிர்ந்து நடக்கும் நாளே
உண்மையான சுதந்திரம்!
பெண்ணின் பேனா பெ. ஆனந்தி.
0 பின்னூட்டங்கள்
முதல் பின்னூட்டத்தை நீங்கள் இடுங்கள்!
உங்கள் கருத்தைப் பகிரவும்