தமிழ்நாடு - நாட வளந்தரு நாடு என் தமிழ்நாடு. - விஸ்வகுல முரசு மாத இதழ்

தமிழ்நாடு - நாட வளந்தரு நாடு என் தமிழ்நாடு.


இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மதராஸ் மாநிலம் (Madras State) அதிகாரப்பூர்வமாக உதயமானது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, 1967 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை அவர்கள், 1967 ஜூலை 18 ஆம் தேதி சென்னை மாநிலத்தின் பெயரை "தமிழ்நாடு" என்று மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர், 1968 நவம்பர் 23 அன்று நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, 1969 ஜனவரி 14 பொங்கல் தினத்தன்று "மெட்ராஸ் மாநிலம்" என்பது அதிகாரப்பூர்வமாக "தமிழ்நாடு" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 


இது வரலாறு. 


மெட்ராஸ் மாநிலம், தமிழ்நாடு என்று ஏன் பெயர்மாற்றம் செய்யப்பட வேண்டும்?. பெயர்மாற்றம் நிகழ்ந்தஉடன் அனைத்தும் மாறிவிடுமா என்ன? பெயரில் அப்படி என்ன இருக்கிறது?. 


பெயர் காலத்தின் அடையாளம். ஒவ்வொரு உயிருக்கு மட்டும் பெயரல்ல. உங்களை அடையாளப்படுத்த, நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள, உங்கள் செயலை, உறவை, பொருளை, நீங்கள் நினைக்கும் அனைத்திற்கும் ஒரு பெயர் தேவைப்படுகிறது. எந்த மொழி நிறைய பெயர்களைக் கொண்டுள்ளதோ அதுவே ஆதிக்கம் பெறும். பழங்காலத்தில் ஆதிக்க இடத்தில் இருந்த தமிழை நாம் புதுச்சொற்கள் சேர்க்காததால் இன்று அன்னிய மொழியின் அடிமைகளாகிவிட்டோம். 


தமிழில் அனைத்திற்கும் வேர்ச்சொற்கள் உண்டா இல்லையா என்பதல்ல விடயம். எனக்குத் தெரியவர வேண்டும். நான் உச்சரிக்க வேண்டும். நான் பார்க்க வேண்டும். நான் படிக்க வேண்டும். நான் எழுத வேண்டும். இது தான் மொழியின் வளர்ச்சி. இந்த வளர்ச்சியை தமிழகத்தை ஆண்ட எந்த அரசும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. பொதுமக்களும் அது குறித்து வருத்தப்படுவதாகத் தெரியவில்லை. மாநிலத்தின் பெயரில் மட்டுமே தமிழ் உள்ளது. தனிமனிதப் பெயர்கள் கூட தமிழ்ப் பெயர்களாகக் காண்பது அரிதாகிவிட்டது. பொருட்களின் பெயர்களில் தமிழ் இல்லை. நிறுவனங்கள், கடைகள் பெயர்களில் தமிழ் இல்லை. ஆங்கிலம் இடம் பிடித்த அளவிற்கு தமிழ்நாட்டில் தமிழ் இல்லை.


இதுவரை சமஸ்கிருதத்தை திணிக்காதே இந்தியை திணிக்காதே மூன்றாம் மொழியை திணிக்காதே என்றெல்லாம் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஒரே ஒரு முறை ஆங்கிலத்தை திணிக்காதே என்று சொல்ல நமக்கு சிந்தனை வரவில்லையே ? அந்த அடிமைத்தனம் நம்மை விட்டுப் போகவில்லை. எங்கிருந்தோ வந்த ஆங்கில மொழி வாழ்ந்து விட்டு போகட்டும். நம் தேசியத்தின் ஒரு மொழியை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று நினைப்பதில் பெருமை கொள்வதாகத் தெரிகிறது. 


மாறுவோம். மாற்றுவோம். தமிழில் பெயர்களைப் பதிவுசெய்வோம். பெயர்ப்பலகைகளில் தனித்தமிழை மட்டுமே பயன்படுத்துவோம். அனைத்துப் பொருட்களின் விபரங்களையும் தமிழில் வழங்க கட்டாயப்படுத்துவோம். 


தமிழ்நாடு. இது தமிழனின் நாடு மட்டுமல்ல. தனித் தமிழின் நாடு. 


மதுரை ராஜ். ரமேஷ்

உதவி ஆசிரியர்

← அனைத்து பதிவுகளும்

0 பின்னூட்டங்கள்

முதல் பின்னூட்டத்தை நீங்கள் இடுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிரவும்
உங்கள் கருத்து நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காண்பிக்கப்படும்.

பக்கங்கள்

சுயம்வரம்
சுயம்வரம்
விஸ்வகுல முரசு மாத இதழின் சார்புச் சேவையாக மணமக்களை இணைக்கும் ஒரு பாலமாக இந்த சுயம்வரம் செயல்படும்.
View
தொடர்புக்கு,
தொடர்புக்கு,
தலைமை அலுவலகம்எண். 8 / 20, வடக்கு மாட தெரு,கோயம்பேடு, சென்னை - 600 107.நிர்வாக அலுவலகம்எண். 49, C சித்தர் காம்ப்ளக்ஸ், YMR பட்டி,ஆர்த்தி தியேட்டர் ரோடு, திண்டுக்கல். 624 001
View
ஆசிரியர் குழு
ஆசிரியர் குழு
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்.ஆசிரியர் செ. சிவக்குமார்.தெய்வீகப் பகுதி ஆசிரியர்விஸ்வபாரதி சிவக்குமார்.இணையாசிரியர்கள்கி. உமாராணி சிவக்குமார் பகவதி S.A. சாமி.உதவி ஆசிரியர்கள்.பொதிகக P. பாலு ஆச்சாரிமதுரை ராஜ். ரமேஷ்மது. ஜெகதீஸ்
View
இதழ் பற்றி
இதழ் பற்றி
விஸ்வகு முரசு மாத இதழ் - இதழியல் மூலமாக இன முன்னேற்றம் என்ற இலக்குடன் தனது பயணத்தை துவங்கியிருக்கிறது. மொழியின் தொன்மையினையும் இனத்தின் பெருமையையும் அறத்தின் வலிமையையும் நிலைநிறுத்தப் பாடுபடும் இதழாக இது பயணிக்கும். அரசியல், கல்வி, பொருளாதாரம் அனைத்திலும் நம் இனத்திற்குரிய அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் வெளிக்கொணரும் ஊடகமாக விஸ்வகுல முரசு பயணிக்கும். எத்தனை சங்கங்கள் இருந்தாலும் அனைவரையும் கருத்தியல்ரீதியாக ஒருங்கிணைத்து இலக்கை அடைய வழிகாட்டும், வழிவகுக்கும் ஆசிரியனாக இருந்து சாதனை படைக்க வருகிறது நம் விஸ்வகுல முரசு மாத இதழ்
View